திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் கலாசார விழுமிய செயற்பாடாக இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், கவியரங்கும் இன்று சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
திறனொளி பத்திரிகையின் பிரதான ஆசிரியரும் மற்றும் ஆசாத் இணைய வானொலியின் பணிப்பாளருமான அறிவிப்பாளர் ஏ.ஸி.நவ்சாட் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸின் உயர்பீட உறுப்பினருமான கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.
மேலும் இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக செயலாளர் திரு. ஹனீபா அவர்கள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகத்தர் திரு. அஸ்மி யாசீன் அவர்கள் மற்றும் ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவரும் திறனொளி கலை மன்ற ஆலோசனை சபை உறுப்பினருமான எம்.முஸம்மில் (அதிபர்) அவர்கள், சம்மாந்துறை பிரதேச பள்ளிவாசல்களில் கடமை புரியும் அதான் அழைப்பாளர்கள் (முஅத்தின்) மற்றும் கவிஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
குறிந்த நிகழ்வுக்கு முன்னர் திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளரகளுக்கான பயிற்சி செயலமர்வும் மார்க்க சொற்பொழி நிகழ்வு ஒன்று அண்மையில் சம்மாந்துறை ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசலில் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அறிவிப்பாளர் ஏ.ஸி.நவ்சாட் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற்றதும் குறிப்பிடத் தக்கதாகும்.
நிகழ்வின் ஒளிப்பதிவுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் - https://www.facebook.com/Sammanthurai24News