ஃபோர்ப்ஸ் (forbes) பத்திரிகை வெளியிட்டுள்ள உலகில் உள்ள மிகவும் சத்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ராணியா நாஷர் என்ற பெண் 97வது இடத்தைப் பிடித்து உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
சவுதி அரேபியாவில் உள்ள சம்பா வங்கியின் (Samba Financial Group) தலைமை நிர்வாக அதிகாரியான (Chief Executive Officer - CEO) ராணியா நாஷர் சவுதி அரேபியாவின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரி என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இவர் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் சம்பா - (Samba Financial Group) சவுதி அரேபியாவில் உள்ள 3வது மிகப் பெரிய வங்கியாகும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - Saudigazette
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.