Ads Area

வௌ்ளை வான் கடத்தல் தொடர்பில் ஊடக சந்திப்பு நடாத்தியோருக்கு விளக்கமறியல்.

வௌ்ளை வான் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் தகவல் வெளியிட்ட இருவரையும், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்ட இருவர்,வௌ்ளை வான்களில் நபர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டனர். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அந்த தகவல்களை வெளியிட்ட இருவரையும் கைது செய்தது. கைதுசெய்யப்பட்ட இருவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் முன்னிலைப்பட்ட போதே, விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe