டுபாயில் வாகனத்தில் அதிக சத்தமாக ஒலியெழுப்பி பாடல்கள் கேட்டால் 400 திர்ஹம் அபராதம்.
பாதசாரிகளுக்கு, குடியிருப்பு பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அவர்களை தொந்தரவு செய்யும் வகையில் வாகனத்தில் அதிக சத்தத்தோடு இசை கேட்டால்/பாடல்கள் கேட்டால் 440 திர்ஹம் தண்டப்பனம் செலுத்த நேரிடும் என ஐக்கிய அரபு இராஜ்ஜிய போக்குவரத்துப் பொலிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
சாலைகளில் வாகனத்தில் பயணம் செய்யும் போது பொறுப்பற்ற முறையில், பிறருக்கு தொந்தரவு ஏற்படுத்தும்படியாக வாகனங்களை செலுத்தாமல் மிகவும் பொறுப்புடன் வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
செய்தி மூலம் - https://gulfnews.com