Ads Area

பாக்.முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை.



பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப், 76. அந்நாட்டு அரசில் அவர் பெரும் அதிகாரம் பெற்று திகழ்ந்தார். 2001 முதல் 2008 வரை அதிபராக இருந்தார். அப்போது கடந்த 2007ல் முஷாரப் பாகிஸ்தானில் அவரச நிலையை அமல் படுத்தினார். இது தொடர்பாக, கடந்த 2013 ல் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.


அரசியல் அவசர நிலை பிரகடனம் செய்து, அரசியல் எதிரிகளை பழிவாங்கியதாகவும், நாட்டிற்கு எதிராக சதி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய் நகருக்கு சென்ற அவர், 2016ல் இருந்து அங்கேயே வசித்து வருகிறார். அங்கு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் மீதான வழக்கு பெஷாவரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. 3 நீதிபதிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த நிலையில், முஷாரப்பிற்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

மூலம் - https://tribune.com.pk




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe