Ads Area

கத்தார் நாட்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு.!

கத்தார் நாட்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இடம் பெறவுள்ளதாக தமிழக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கத்தார் நாட்டில் நடக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அசுரன் வெற்றிக்குப் பின் இயக்குனர் வெற்றிமாறன் சூரியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இந்த படத்தை ஆர் எஸ் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கவுள்ளார்.

இலங்கை இந்திய தமிழர்கள் அதிகளவில் வேலைப் பார்க்கும் அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் படப்பிடிப்பை நடத்த வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார் என்பதாகவும், இதற்கான விசா ஏற்பாடுகளை படக்குழு செய்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe