Ads Area

வாடகை தாய் மூலம் பிறந்த உலகின் முதல் சிறுத்தை குட்டிகள்.

செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பிறப்பது தற்போதைய நாகரீக உலகில் சாத்தியமானது. குழந்தைப் பேறு இல்லாத எத்தனையோ தம்பதிகள் சோதனைக் குழாய் தொழில்நுட்பம் மூலம் பலன் அடைந்துள்ளனர். அதே போல் கருவுற இயலாத பெண்கள் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் முறையும் உள்ளது. 

ஆனால் உலகில் முதன்முறையாக விலங்குகளில் இவ்வகை கருத்தரித்தல் மருத்துவ முறையை உபயோகித்து சாதனை படைத்துள்ளனர் விஞ்ஞானிகள். இது போன்ற பயனுள்ள தகவல்களை அறிய சம்மாந்துறை24 இணையத்தளத்தோடு இணைந்திருங்கள் (www.sammanthurai24.com)

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் டெலாவேர் கவுண்டியில் உள்ளது கொலம்பஸ் உயிரியல் பூங்கா. இந்த பூங்காவில் கிபிபி என்ற 6 வயது சிறுத்தை உள்ளது. ஒரு சில மருத்துவ காரணங்களால் கிபிபி தாய்மை அடைய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிபிபியின் சினை முட்டைகளை பிரித்து, ஆய்வகத்தில் கரு உற்பத்தி செய்து அதை இஸ்ஸி என்ற 3 வயது சிறுத்தையின் கருப்பைக்குள் ஆய்வாளர்கள் செலுத்தினர். 

இந்நிலையில், இஸ்ஸி சிறுத்தை இரண்டு குட்டிகளை ஈன்றதாக கொலம்பஸ் உயிரியியல் பூங்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரியியல் பூங்காவின் விலங்கு சுகாதார துணைத் தலைவர் டாக்டர் ராண்டி ஜங்கே கூறுகையில், ‘இஸ்ஸி சிறுத்தை, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிறுத்தை குட்டியை ஈன்றது. இந்த வளர்ச்சி எதிர்காலத்தில் உயிரினங்களின் எண்ணிக்கையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். ஆய்வாளர்கள் இந்த சோதனை முயற்சியை மூன்று முறை செயல்படுத்தியுள்ளனர். முதல் இரண்டு முறை வெற்றி கிட்டாத நிலையில் இம்முறை பலன் கிடைத்துள்ளது’, என தெரிவித்தார். 

சிறுத்தைகளின் கர்ப்ப காலம் 90 முதல் 95 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe