Ads Area

சவுதியில் பாரபட்சமின்றி அனைவருக்கும் இலவச கொரோனா சிகிச்சை - மன்னர் சல்மான் அறிவிப்பு.

சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படும் என சவுதி அரேபிய மன்னரும், மக்கா-மதினா புனித நகரங்களின் பாதுகாவலருமான சல்மான் அறிவித்துள்ளார்.

சவுதி அரேபியால் நாளுக்கு நாள் கொரோன தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் இவ் வேளை மன்னர் சல்மான் இவ் உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், வெளிநாட்டினராக இருந்தாலும், சுற்றுலாவுக்கு வந்தவராக இருந்தாலும், விசா காலம் முடிவடைந்து சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவராக இருந்தாலும் அனைவருக்கும் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும் என மன்சர் சல்மான் அறிவித்துள்ளார்.

இதனால் யாருக்கேனும் கொரோனா தொற்று இருப்பதாக உணர்ந்தால், தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் தயங்காமல் அனைவரும் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

மன்னர் சல்மானின் இத்தகைய அறிவிப்பினை உலக சுகாதார அமைப்பும் பாராட்டியுள்ளது.

சவுதி அரேபியால் இதுவரை 1453 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு 115 பேர் குணமடைந்துள்ளனர் மேலும் இதுவரை 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.


செய்தி மூலம் - http://www.saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe