மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சென்று கைது செய்யப்பட்ட முஸ்லிம் குடும்பம் விடுவிப்பு.
மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு சென்ற நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு முஸ்லிம்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காவற்துறை விசாரணைகளின் பின்னர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், நோயை குணப்படுத்தும் நோக்கிலேயே தாங்கள் தேவாலயத்திற்கு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் காவற்துறையினரிடம் தெரிவித்திருந்ததாக மட்டக்களப்பு காவற்துறையினர் குறிப்பிட்டனர்.