Ads Area

கிழக்கில் கருணாவும்-பிள்ளையானும் முஸ்லிம் விரோத அரசியல் செய்கிறார்கள் அதை நாம் அனுமதிக்க மாட்டோம்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் விரோத அரசியல் செய்யப்பட்டு வருகிறது. இது ஆபத்தானது. இதை நாம் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

யாழ் வடமராட்சியில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் விளக்கமளிப்பு கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

கிழக்கில் அரசியல் செய்யும் கருணா ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்குகிறார். பிள்ளையான் ஒன்றை தலைமை தாங்குகிறார். கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என ஒன்று இயங்குகிறது. இவை எல்லாம் எமக்கு எதிரானவை.

கருணா, பிள்ளையான் போன்றவர்கள் முஸ்லிம் விரோத அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். முஸ்லிம்களுடன் சில பிரச்சனைகள் உள்ளனதான். அதை வைத்து முஸ்லிம் விரோத அரசியல் செய்கிறார்கள். இது மிக ஆபத்தானது. இதை தொடர்ந்தால் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமாகாது. முஸ்லிம்களை எம்மிலிருந்து அந்நியப்படுத்துவதற்காக இவர்கள் இயங்குகிறார்கள். இதை நாம் அனுமதிக்க முடியாது. கிழக்கு மக்களிற்கு நாம் இது குறித்து விளக்கமளிப்போம் என்றார். (pagetamil)





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe