சீனாவின் ஊஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது ஐரோப்பியா மற்றும் அமெரிக்க கண்ட நாடுகள் வரை பரவியுள்ளது. சீனா மற்றும் உலக நாடுகளில் தற்போது வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவிலும் கேரள மாநிலத்தில் மூன்று பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தனர்.
அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக பல நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.