சம்மாந்துறைத் தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளராக எம்.ஏ. ஹசன் அலி அவர்கள் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்ரஸில் இணைந்து விட்டதாக வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை இது தொடர்பில் ஹசன் அலி அவர்கள் தனது முகநுால் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.
தற்போது சமூக வலைத்தலத்தில் உலாவிக் கொண்டிருக்கும், நானும் தேசியக் காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா இருக்கின்ற புகைப்படத்திற்கும், தேசியக் காங்கிரஸ் கட்சியின் இணைவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். இது ஓர் சாதாரண சந்திப்பு தவிர கட்சி இணைவு அல்ல.
நன்றி
M. A. ஹசனலி
பிரதம அமைப்பாளர்- ஐக்கிய தேசியக் கட்சி