Ads Area

முஸ்லிம்கள் எதிர்வரும் தேர்தலில் நமது பிரதிநிதித்துவங்களை அதிகரிக்க சிந்தித்து ஒற்றுமையோடு செயற்பட வேண்டும்.

எதிர்வருகின்ற பொதுத்தேர்தல் மூலம் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான மறைமுக சதிகள் தற்போதைய அரசாங்கத்தினால் அரங்கேற்றப்படுகின்றன. இந்த சதிகளை தோற்கடித்து நமது பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதாயின் நமக்கிடையேயுள்ள வேறுபாடுகளை மறந்து அரசியல் மற்றும் சிவில் தலைமைகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதுவே காலத்தின் தேவையாக மாறியுள்ளது. என திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வீதிகளை மக்கள் பாவனைக்காக வைபவரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதிகளை திறந்து  வைத்த பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொர்ந்து உரையாற்றும் போது - நடைபெறவுள்ள பொதுத் தேர்தலானது சிறுபான்மை சமூகத்திற்கு பாரய சவாலாக இருக்கப்போகின்றது. இன்றைய அரசாங்கம் இத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுமாக இருந்தால் அது நாட்டிற்கு பேராபத்தாக வந்து முடியும்.

புதிய அரசாங்கத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், முன்நகர்வுகள் அனைத்துமே நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை உதாசீனம் செய்து ஒரு பௌத்த மேலாதிக்க அரசாங்கத்தை நாட்டில் நிரந்தமாக உருவாக்குவதையே தீவிரமாக கொண்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஜனநாயகத்திற்கு விரோதமாகஅரசியல் மாற்றத்திற்கு முஸ்லிம் தலைமைகள் ஆதரவு வரங்கவில்லை என்பதற்காகவும், ஏப்ரல் தாக்குதல் சம்பவத்தினை அரசாங்கம் சாட்டாக வைத்துக் கொண்டும் முஸ்லிம் சமூகத்தையும், அவர்கள் பிரநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் பலவீனப்படுத்தப் படுத்தப்படுத்தப் பார்ப்பது மட்டுல்ல, ஓரங்கட்டுவதற்கான கடுமையான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வருகின்ற பொதுத்தேர்தலானது முஸ்லிம் சமூகத்தைப் பெறுத்தவரை பாரிய சவாலும், போராட்டமும் கொண்டது என்பதனை மறுத்துக் கூறமுடியாது.

எனவே, முஸ்லிம்கள் எதிர்வருகின்ற தேர்தலில் நமது பிரதிநிதித்துவங்களை அதிகரிக்க சிந்தித்து ஒற்றுமையோடு செயற்பட வேண்டும்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe