புத்தளத்தில் உயிர் கொல்லி நோயான கொரானா தொற்று வெளிநாட்டில் இருந்து வந்த யாத்திரிகர் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து நகரின் இதர நோய்த் தொற்றாளர்களை அடையாளம் காணும் முகமாக தனிமைப் படுத்துவதற்கான நிலையமாக புத்தளம் ஸாஹிராத் தேசியக் கல்லூரி தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட துவான் என்கிற யாத்ரீகருடன் பழகியவர்கள் உற்பட பல்வேறு நபர்கள் இந்த தனிமை முகாமுக்கு கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் சாஹிராவை கண்காணிப்பு நிலையமாக மாற்றுவதற்காக வேண்டி இயந்திரக் கதியில் வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.