இன்றைய சூழ்நிலையில் சம்மாந்துறையில் வருமானத்தை இழந்து வாடும் குடும்பங்களுக்கு YBM அஸ்மி அவர்களினால் நிவாரணப் பொதிகள் விநியோகம்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் நாளாந்த வருமானத்தை இழந்து வாடும் கூலித் தொழில் செய்யும் குடும்பங்களுக்கு அவர்களின் தேவையறிந்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகத்தர் சகோதரர் YBM அஸ்மி அவர்களினால் நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.
சம்மாந்துறை சமூக அபிவிருத்திக்கான அமைப்பு சகோதரர் YBM அஸ்மி அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க அவரது முயற்சியினால் இவ் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இவ் அவசரகால சமூக வேலைத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி உத்தியோகத்தர், சமூக சேவகர் சகோதரர் YBM அஸ்மி அவர்களுக்கு சம்மாந்துறை சமூக அபிவிருத்திக்கான அமைப்பு சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.