சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் தொழில் நிமிர்த்தம் வாழும் வெளிநாட்டினர் தங்கள் குடும்பத்தாருக்கு அல்-ராஜ்ஹி (Al Rajhi Tahweel) வங்கி ஊடாக ஆறு மாதங்களுக்கு சேவைக் கட்டணம் இன்றி இலவசமாக பணம் அனுப்பலாம் என Al Rajhi Tahweel வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
சவுதியில் பணிபுரியும் வெளிநாட்டினர் வங்கிகளுக்கு வருகை தந்து பணம் அனுப்பும் போது கொரோனா சமூக இடைவெளி சீர்குலைவதனால் அவர்கள் Al Rajhi Tahweel வங்கியின் அப்ளிகேசன் (Al-Rajhi Tahweel application), ஏ.டீ.எம் (ATM) அல்- ராஜ் வங்கி அப்ளிகேசன் (Al-Rajhi Bank application) போன்ற வழிகள் ஊடாக எந்தவித சேவைக் கட்டணமும் இன்றி உள்நாட்டிக்கோ வெளிநாட்டிக்கோ ஆறு மாதங்களுக்கு இலவசமாக பணம் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Al Rajhi Tahweel வங்கியின் ஏ.டீ.எம் (ATM) ஊடாக பணம் அனுப்பும் போது 16 றியால்கள் வரை சேவைக் கட்டணமும், வங்கியின் அப்ளிகேசன் (Al-Rajhi Tahweel application) ஊடாக பணம் அனுப்பும் போது 14 றியால்கள் வரையும் சேவைக் கட்டணங்கள் அறவிடப்பட்டது இவ் அறிவித்தலுக்குப் பிறகு இனிமேல் ஆறு மாதங்களுக்கு இலவசமாக எவ்வித கட்டணமும் இன்றி பணம் அனுப்ப முடியும்.