கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து சம்மாந்துறை பிரதேச பொது மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும், வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு காலை 6.00 மணி தொடக்கம் மதியம் 4.00 மணி வரையான நேரத்தில் பொதுமக்கள் சுகாதார துறையினால் கடைபிடிக்குமாறு கூறப்படும் விதிமுறைகளை அறிவுருத்துவதற்கு கடமையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையின், சுகாதாரதுறையினருக்கும் சம்மாந்துறை பிரதேச சபையினால் தண்ணீர் போத்தல், மற்றும் குளிர்பானங்கள் இன்று வியாழக்கிழமை வினியோகிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் மக்கள் மத்தியில் சுகாதார நலன்விடயத்தில் பொலிஸ், பாதுகாப்பு படையினரும், பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் கடமையில் ஈடுபபட்ட உத்தியோகத்தர்களுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் பணிப்புரைக்கமைவாக பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச சபை உத்தியோகத்தர்களினால் தண்ணீர் போத்தல் மற்றும் குளிர்பானங்கள் கடமையில் ஈடுபட்ட இடங்களுக்கு சென்று வினியோகிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 6ம் திகதி அன்றும் இதே போன்று பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள படையினர் மற்றும் சுகாதார துறையினருக்கு அவர்களின் தாகம் தணிக்க தண்ணீர் போத்தல்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கதாகும்.
சம்மாந்துறை பிரதேச சபை.