Ads Area

டுபாயில் (UAE) வசிக்கும் இலங்கையர்கள் அவதானம் ; இப்படிச் செய்தால் 1000 திர்ஹம் அபராதம்.

சம்மாந்துறை அன்சார்.

பாவித்த முகத்திரை (masks) மற்றும் கையுறை (gloves) களை யாராவது வீதியில் வீசினால் 1000 திர்ஹம் அபராதம் செலுத்த நேரிடும் என ஐக்கிய அரபு இராஜ்ஜிய பொலிஸார் ((UAE) தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அபுதாபி பொலிஸார் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்ததாவது,

சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும், ஆபத்தான முறையிலும் பாவித்த முகத்திரை (masks) மற்றும் கையுறை (gloves) களை யாராவது வீதியில் வீசிச் சென்றால் அவர்களுக்கு எதிராக 1000 திர்ஹம் அபராதம் விதிக்கப்டும் மேலும் வாகனத்தில் இருந்தவாறு வீசிச் சென்றால் அவர்களுக்கு எதிராக 6 கருப்புப் புள்ளிகளும் பதியப்படும் என தெரிவித்துள்ளனர்.

தற்போதைய கொரோனா வைரஸ் பரவியுள்ள ஆபத்தான சூழ்நிலையில் பயன்படுத்தப்பட்ட முகமூடிகள் மற்றும் கையுறைகளை இவ்வாறு வீசுவதனால் கொரோனா வைரஸ் COVID-19 பரவக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சமூகத்தின் ஒவ்வொருவரது கடமையாகும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

ஆகவே ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் வசிக்கும் இலங்கையர்கள் இது விடையத்தில் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe