Ads Area

டுபாயில் அல்லல் படுவோருக்கு மூன்று நேரமும் இலவசமாக உணவு வழங்கும் தமிழக உணவகம்.

டுபாயில் தேய்ரா  பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருடைய அப்பா கடை உணவகத்திலிருந்து  பத்து நாட்களுக்கு தினமும் மதிய உணவு 500 நபர்களுக்கு இலவசமாக வழங்கப் படுகிறது, இத் தகவலை அப்பா கடை உணவகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய கொரோனா நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவும் முகமாக அப்பா கடை உணவகத்தினர் இவ் உயரிய சேவையினை செய்து வருகின்றனர்.

மேலும் வேலை இல்லாமல் பொருளாதார நெருக்கடிகளுக்கு உட்பட்டவர்கள் அப்பா கடை உணவகத்தினை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு காலை மற்றும் இரவு உணவுகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அவ் உணவக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி - இம்போட்மிரர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe