சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4462 ஆக உயர்ந்துள்ளது இன்று மட்டும் 429 கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
அதே போல் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் மரணமடைந்துள்ளனர் இவர்களோடு மரணமானோர் தொகை 59 ஆக உயர்ந்துள்ளது.
சவுதி அரேபியாவில் கொரோனா பரவலைத் தடுக்க 21 நாட்களுக்கு 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கவும் சவுதி அரசு முடிவெடுத்துள்ளது.
எதிர்வரும் வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சம் வரை செல்லலாம் என சவுதி அரேபிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.