Ads Area

எழுத்தாளர் ரம்ஸி றசீக்கின் விடுதலைக்காக ஒன்றினைந்து குரல் கொடுப்போம்.

(A.Azmin)

றம்ஸி றாசிக்; இனவாதத்துக்கு எதிரான ஒரு மிகத்துணிச்சலான ஒரு எழுத்தாளன் இவரது எழுத்துக்கள் சிங்கள-முஸ்லிம் நல்லிணக்கம் சார்ந்தவைகள், நசுக்கப்படுகின்ற சிறுபான்மை மக்களின் உரிமைகள் சார்ந்தவை. 

இலங்கையில் சிங்கள இனவாதிகளினால் முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பரப்படும் நச்சுக்கருத்துக்களுக்கு உரியபதில்களை வழங்கி சிந்தனாரீதியான போராட்டமொன்றை முன்னெடுக்கவேண்டும் என தனது முகநூல் குறிப்பொன்றில் இவர் கருத்துப் பதிவிட்டிருந்தார் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.

இலங்கைப் பொலிஸார் இவரின் மீது ICCPR, CYPER CRIME சட்டத்தின்கீழ் வழக்குத்தொடுக்க முனைந்துவருகின்றார்கள். சதுரபோன்ற இனவாதிகள் தொடர்ந்தும் ஊடகங்களின்வாயிலாக பலவிதமான இனவாதப் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்ற சமயத்திலும் அவர்கள் இன்றுவரை சுதந்திரமாக தமது இனவாதப் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்கள். ஆனால் றம்ஸி றாசிக் போன்ற உண்மைக்காக உழைக்கின்றவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

அநிதியிழைக்கப்பட்டிருக்கின்ற சகோதரர் றம்ஸி றாசிக் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக ஒரு பாரிய சமூக அழுத்தமொன்றினை உடனடியாக முன்வைக்கவேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பல்லவா? இவருக்கு நீதிகிடைப்பதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்போடு செயற்பட முன்வருவோம்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe