Ads Area

சவுதியிலிருந்து விடுமுறையில் சென்று மீண்டும் சவுதிக்கு வர முடியாமல் தவிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் கொரோனா கெடுபிடிகள் ஏற்படுவதற்கு முன்னர் தங்கள் நாடுகளுக்கு விடுமுறையில் சென்றவர்களது விசா காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு இலவசமாக நீடிக்க சவுதி அரேபி மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய கொடி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சவுதி அரேபியாவில் பல இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சவுதியில் இருந்து கொரேனா தொற்று கெடுபிடிகளுக்கு முன்னரே  விடுமுறையில் (Re-Entry Visa) சென்றவர்கள் மற்றும் பைனல் எக்சிட் (Final Exit) செல்ல இருப்பவர்கள் போன்றோருக்கு வழங்கப்பட்ட விசாக் காலம் நிறைவடையும் நிலையில் உள்ளதால் அவர்கள் சவுதிக்கு மீண்டும் நுழைவதற்கு மற்றும் சவுதியிலிருந்து வெளியேறுவதற்கு சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந் நிலையிலேயே சவுதி அரேபியாவின் மன்னரும், மக்கா-மதீனா போன்ற புனித நகரங்களின் பாதுகாவலருமான மன்னர் சல்மான் இவ் உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

 Feb. 25 and May 24 வரையான காலப்பகுதியில் விசா முடியும் தருவாயில் இருப்போருக்கு அவர்களது விசாக்காலம் 3 மாதங்களுக்கு இலவசமாக நீடிக்கப்படவுள்ளது. மேலும் அவர்களது விசா நீடிப்பு விடயமாக யாரும் ஜவசாத் (Jawazat) அலுவலகங்களுக்கு செல்லத் தேவையில்லை குறித்த நபர்களது விசா காலம் தானாகவே (automatically through its system) 3 மாதங்களுக்கு செல்லுபடியாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe