சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூரில் ஹெரோயினுடன் 24 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர் .
சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பிரகாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் விசேட போலீஸ் குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு பரிசோதனை செய்த போது குறித்த நபர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மின்கலத்தில் மறைக்க பட்டிருந்த 240 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டு சம்மாந்துறை நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர் படுத்தியபோது எதிர்வரும் மே மாதம் 18 ம் திகதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
நன்றி - battinews