Ads Area

சவுதி அரேபியாவில் நோன்பு கால தராவீஹ் தொழுகை பள்ளிவாசல்களில் இடம் பெறாது என அறிவிப்பு.

சவுதி அரேபியாவில் நோன்பு கால தராவீஹ் தொழுகை பள்ளிவாசல்களில் இடம் பெறாது என்றும், தராவீஹ் தொழுகைகளை வீட்டிலேயே தொழுது கொள்ளுமாறும் சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், தவா மற்றும் வழிகாட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று முற்றாக நீங்கும் வரை பள்ளிவாசல்களில் தொழுகை நடாத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படாது எனவும் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சர் டாக்டர் அப்துல் லத்தீப் அல் ஷேக் கூறுகையில், "தராவீஹ் தொழுகையை நிறுத்தி வைப்பதை விட பள்ளிவாசல்களில் தினசரி 5 நேர தொழுகைகளை நிறுத்துவது மிக முக்கியமானது. தொழுகைகள் பள்ளிவாசல்களில் நடந்தாலோ அல்லது வீட்டில் நடந்தாலோ எங்கள் தொழுகைகளை ஏற்றுக் கொள்ளும்படி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறோம்.


இவ்வாறான நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் சுகாதார ஆரோக்கியத்திற்காக எடுக்கப்பட்ட முடிவுகளாகும் எனத் தெரிவித்துள்ளார்.

செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe