Ads Area

பாலமுனை பிரதேச வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கு வீடு தேடிச்சென்று மருந்து வழங்குகிறது.

நூருள் ஹுதா உமர்.

அம்பாறை மாவட்டம், பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் கிளினிக்கை தொடரும் கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை  கோரோனா வைரஸ் கிருமிகள் பரவும் சூழ் நிலையை கருத்திற்கொண்டு நோயாளிகளின் நலன்கருதி அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கும் செயற்பாடுகளை பாலமுனை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

தபால் மூலம் மற்றும் இதர ஏற்பாடுகளின் மூலம் ஏனைய வைத்தியசாலைகள் தமது நோயாளர்களுக்கு சேவை வழங்கிவரும் இவ்வேளையில் பாலமுனை பிரதேச வைத்தியசாலையின் இச்சேவையை மக்கள் பாராட்டி வருகின்றனர். 

அத்துடன் பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் கிளினிக் பதிவுள்ள நோயாளர்கள் மருந்துகள் எடுக்க தவரும் பட்சத்தில் 0777236954 / 0672255061/0776827770 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு விபரங்களை சமர்ப்பிக்குமாறு வேண்டிக்கொள்ளபடுகின்றீர்கள். 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe