Ads Area

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை இன-மத அடிப்படையில் அணுகக் கூடாது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மதம், இனம் அடிப்படையில்அணுகக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் இவ்வாறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மதக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டவர்களால் கொரோனா பரவியது குறித்து உலக சுகாதார அமைப்பு (அவசரக்காலதிட்டங்கள்) இயக்குநர் மைக் ரயானிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து விளக்கம் அளித்த அவர், “கோவிட் 19 வைரஸ் யாருடைய தவறும் இல்லை. ஒவ்வொரு நோயாளியும் பாதிக்கப்பட்டவராகவே அணுக வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மத, இன அடிப்படையில் பிரிக்கக்கூடாது. அதனால் எந்த பயனும் இல்லை,” என்கிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மதத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டு கொரோனா ஜிகாத் போனற பதங்கள் இணையத்தில் ட்ரெண்டானது.

தப்லிக் ஜமாத் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் வேண்டுமென்றே போலீஸ் மீது எச்சில் துப்புவது போன்ற போலி காணொளிகளும் பகிரப்பட்டுள்ளன.

மேலும் மைக் ரயான்,“மத வழிப்பாட்டு காரணங்கள்அல்லது வேறு காரணங்களாக இருந்தாலும் மக்கள் அதிகம் கூடுவது ஆபத்தானது. உலக சுகாதார நிறுவனம் இது குறித்த வழிகாட்டல்களை வழங்கி உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலையீட்டுக்குப்பின் பலகூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன அல்லது ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

இஸ்லாமிய, கிறிஸ்தவ உள்ளிட்ட பல மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்,” என்றுகூறினார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe