நாடாளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சில தரப்பினர் மட்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையிலும் ஏனைய மாவட்டங்களில் பகுதியளவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.