கொரோனா பாதிப்பினால் கத்தார் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இப்போது அமெரிக்காவில் தனது அராஜகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது, சீனா இத்தாலி போன்ற நாடுகள் வெகுவாக பாதித்தாலும் இப்போது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவே தெரிகிறது.
அந்த வரிசையில் கத்தாரும் தங்களால் முடிந்த அனைத்து வகையான தடுப்பு முறைகளையும் எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அதே போல் இலங்கை வருகின்ற ஏப்ரல் 19 ம் திகதிக்குள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்றும் அறிவித்துள்ளது.
இருக்கின்ற நாட்களில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகப்படுத்தினாலும் பரவாயில்லை பட்ட கஷ்டத்தோடு அதையும் தாங்கிக் கொள்கிறோம் ஆனால் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தி எங்களை பழைய வாழ்கை முறைக்கு மாத்தி வருகின்ற நோன்பிலிருந்தாவது நாங்கள் வழமை போல செயற்பட உரியவர்கள் நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
mgulf news.