தகவல் - Faris M Farook
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த சா/த பரீட்சையில் இரண்டாம் மொழி சிங்கள பாடத்தில் சம்மாந்துறை கல்வி வலயம் அதிக சாதனையை படைத்துள்ளது. இச் சாதனையை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மற்றும் சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகிய மாணவர்களே நிகழத்தியுள்ளனர்.
இங்கு சிங்கள மொழியில் பட்டை தீட்டப்பட்ட ஒரு ஆசானினால் கற்பிக்கப்பட்டுள்ளது.
யார் அந்த ஆசான்!
தனது ஆரம்பகல்வியை கல்முனை சிங்கள மத்திய மகா வித்தியாலயத்திலும் அதனை தொடர்ந்து உயர்தர கல்வியை அம்பாறை டீ.எஸ் சேனநாயக்க தேசிய படசாலையிலும் சிங்கள மொழி மூலமும் கல்வி கற்று, அதன் பின் அம்பாறை உயர் தொழில் நுட்பவியல் கல்லூரியில் உயர் தேசிய டிப்லோமா முகாமைத்துவம், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழியில் டிப்ளோமாவை பூர்த்தி செய்து அதனைத்தொடர்ந்து இளங்கலை வியாபார நிர்வாகம் பட்டம் படிப்பயும் பூர்த்தி செய்துள்ளார்.
இவர் 2013 ஆம் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு நிழல் கல்வி பிரதி அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.