பாறுக் ஷிஹான்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரங்களை இழந்துள்ளசமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அத்தியவசிய பொருட்கள் பழுதடைந்து காணப்ப்பட்டதனால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஊரடங்கு சட்டத்தினால் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரிவில் உள்ளடங்குகின்ற பெரிய நீலாவணை பகுதியில் உள்ள இரு வேறு தொடர்மாடிகுடியிருப்பில் உள்ள வறிய மக்களுக்கே இப்பொருட்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த புதன் கிழமை (1) மதியம் இவ்வத்தியவசியப் பொதிகள் அப்பகுதி மக்களுக்கு ரூபா 600க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் இப்பொதியின் விநியோக சேவைக்கு 20 ரூபா வீதம் அறவிடப்பட்டுள்ளது.
பணம் கொடுத்து வாங்கப்பட்ட இப்பொருட்கள் மிகவும் பழுதடைந்து காணப்பட்ட நிலையில் மக்கள் அதனை கழிவுப்போருட்கள் வீசும் பகுதிக்கு எறிந்திருந்தனர்.
இப்பொருட்கள் யாவும் சாய்ந்தமருது பகுதியில் பொதி செய்யப்பட்டுள்ளதுடன் சமூர்த்தி திணைக்களத்தின் அணுசரனை ஊடாக வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக இரு வேறு பகுதியில் அமைந்துள்ள பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத்திட்டத்தில் உள்ள 100க்கும் அதிகமான மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.