வெளிநாடுகளிலிருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே 522 பேர் இலங்கை திரும்பியிருந்ததாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
எனினும், கொரேனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிலர் இலங்கைக்கு வருகின்றமையே இன்று நாம் முகங்கொடுத்துள்ள பாரியதொரு சவாலாகும்.
தற்போது வரை வெளிநாடுகளிலிலேயே கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் 522 பேர் இலங்கை வந்துள்ளனர். இவர்களில் குவைத்திலிருந்து நாடு திரும்பிய 466 பேரில் 300 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாகவே இலங்கைக்கு வந்திருந்தனர்.
கத்தாரிலிருந்து நாடு திரும்பிய 270 பேரில் 150 பேர் தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே நாடு திரும்பியிருந்தனர் என்றார். (Metro News)