Ads Area

கருப்பினத்தவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த போலிஸை விவாகரத்து செய்யவுள்ள அவரது மனைவி.

அமெரிக்காவின் மினஸ்சோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரத்தில் கடந்த திங்களன்று நடந்து சென்ற கருப்பினத்தை சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த 4 காவல்துறையினர், பொது இடத்தில் கருப்பினத்தவரின் கழுத்தின் மீது தங்களது கால்களை மடக்கி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நபர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர் தன்னால் மூச்சு விட முடியவில்லை என்னை கொன்றுவிடாதீர்கள் என பேசும் காட்சிகள் பதிவாகியிருந்தன.இதனை தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதனால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் போராட்டக்களமாக காட்சியளித்து வருகிறது.

போராட்டம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கருப்பின இளைஞரை கொலை செய்த போலீஸ் அதிகாரிக்கு, அவரது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கணவரின் செயலால் வேதனை அடைந்துள்ளதாகவும், அதன் காரணமாக தனது வழக்கறிஞர் மூலம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe