Ads Area

கத்தார் Airways டிக்கட்கள் இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிப்பு.

கத்தார் Airways நிறுவனத்தின் விமான டிக்கெட்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என அந்நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது. பயணிகள் எத்தனை தடவை வேண்டுமானாலும் பயணத் திகதியை இலவசமாக மாற்றியமைக்க முடியும் என்றும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கத்தார் ஏர்வேஸ் அலுவலகங்கள் அல்லது தொடர்பு மையங்களுக்கு அழைப்பதன் மூலம் பயணிகள் தங்களது டிக்கெட்டின் திகதியினை மாற்றம் செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை உலகின் சிறந்த விமான நிலைய தரவரிசையில் கத்தார்‌ ஹமாத் சர்வதேச விமான நிலையம் மூன்றாம் இடத்தைப் பிடித்திருப்பதாகவும் கத்தார் நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையம் 2019ஆம் ஆண்டில் நான்காவது இடத்திலிருந்து 2020ஆம் ஆண்டில் மூன்றாம் இடத்திற்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விரிவான செய்திகளுக்கு வீடியோவினைக் கிளிக் செய்யவும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe