கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 45465 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (25.05.2020) மட்டும் புதியதாக 1751 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் கொரேனா வைரஸ் காரணமாக கத்தாரில் இது வரை 26 பேர் மரணடைந்துள்ளார்கள் என்பதுடன், 10363 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்ய 16000 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Qatar Tamil.