Ads Area

தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பாறுக் ஷிஹான்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள  ரட்ணஜீவன் கூல்  தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய காங்கிரஸின் கல்முனை தொகுதி வேட்பாளரும் பிரபல உயிரியல் விரிவுரையாளருமான றிசாத் ஷரீஃப் தெரிவித்தார்.


தேர்தல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்  தனது கருத்தில்

மூவர் அடங்கிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் கூட்டுப் பொறுப்பு மீறப்படுவது என்பது மனம் வருந்த்தக்க ஒரு விடயமாக இருக்கின்றது . கூட்டுப்பொறுப்புள்ள   நபர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருப்பதை விட கூட்டுப் பொறுப்போடு செயற்படவேண்டிய நபர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருப்பது எதிர்கால தேர்தலில் சிறப்பாக இருக்கும் என்பது எனது உளப்பூர்வமான கருத்து . பேராசிரியர் ரட்னஜீவன் கூல்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிபார்சின் பேரில் தேர்தல்கள் ஆணைக்குழு வந்தவர் என அறியக்கிடைத்த விடயம் . கற்று அறிந்த  பேராசிரியர் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த விடயமானாலும் நேர் நிலையில் நின்று செயற்பட வேண்டும் அதனை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரது செயற்பாடுகளை நான் வரவேற்கிறேன் என்றார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe