கத்தாரிலிருந்து இன்று (மே-25) இலங்கை செல்லவிருந்த விமானம் மறு அறிவித்தல் வரும் வரை இரத்து.
Makkal Nanban Ansar25.5.20
கத்தாரிலிருந்து இன்று (மே-25) இலங்கை பறக்கவிருந்ந சிறப்பு விமானம் மறு அறிவித்தல் வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவினால் வெளிநாடுகளில் சிக்கி தாயகம் செல்ல முடியாமல் இருந்த இலங்கையர்களை விசேட விமானம் மூலம் தாயகத்திற்கு அழைத்து வர இலங்கை அரசு தீர்மானித்தமையின் அடிப்படையில் அண்மையில் உலகின் பல நாடுகளிலிருந்து இலங்கையர்கள் கட்டம் கட்டமாக அழைத்து வரப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கத்தாரிலுள்ள இலங்கையர்களில் ஒரு தொகையினர் இன்று (25.05.2020) தாயகம் அழைத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டிருந்தனர்.