றிஸாலா அமைப்பானது தனது சேவையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் விதமாக ஏழை எளியோர்களுக்கான இலவச ஆடையகமொன்றினை RISALA FREE TEXTILES எனும் பெயரில் இன்ஷா அல்லாஹ் நிந்தவூர் மண்ணில் திறக்கவுள்ளது.
இங்கு தேவையுடைய மக்கள் முற்றிலும் இலவசமாக ஆடைகளை கொள்வனவு செய்ய முடியும். குடும்பத்தோடு வருகை தந்து எந்தவிதமான கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாக தங்களுக்கான ஆடைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறான நிலையில் உள்ள மக்களுக்கு பெருநாளுக்கான ஆடைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆடை அகத்திணை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முழுமையான ஒத்துழைப்பினை எமது ஊர் மக்களிடம் வேண்டி நிற்கின்றார்கள்.
இந்த ஆடையகத்தின் திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் இன்று தினம் 2020.05.15 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 AM மணியளவில் இடம்பெறும்.
இடம்: பாத்திமா முஸ்லிம் பெண்கள் அரபுக் கல்லூரிக்கு முன்னாலுள்ள வீதியில் அமைந்துள்ள கடை.
தேவையுடைய மக்கள் தங்களுக்கு யாரேனும் தெரிந்தால் அவர்கள் தொடர்பான தகவல்களை பின்வரும் இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
மௌலவி MU.Aashik ali (Khasifi)
0764306476
றிஸாலா அமைப்பு
சமூக சேவைப்பிரிவு,
நிந்தவூர்.
Thanks - Nintavur Today News.
டுபாயில் பிச்சையெடுத்த 242 வெளிநாட்டினர் அதிரடிக் கைது, மேலதிக தகவல்கள் வீடியோவில்.