Ads Area

இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை.

இனவாதங்களைத் தூண்டும் வகையில் எவரும் செயற்படக்கூடாது, இன ஒற்றுமையுடன் அனைவரும் வாழ ஓரணியில் திகழ வேண்டும் எனபிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இனவாதத்தை வளர்த்து விட்டு, அதில் குளிர்காய எவரும் முற்படக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் அரங்கேற்றப்பட்டுவரும் இனவாதச் செயற்பாடுகளுக்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் , மூவின மக்களும் இன, மத, மொழி வேறுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ்வதே அரசின் விருப்பம் எனவும், இனவாதத்தைத் தூண்டி அதிகாரத்தைத் தக்க வைப்பது அரசின் நோக்கமல்ல எனவும் அவர் கூறியுள்ளார்

உண்மையான இனவாதிகளை மக்கள் முன்னிலையில் நிறுத்தி அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் குறிக்கோள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கத்தார் நாட்டில் உள்ள அனைவருக்கும் அந் நாட்டு அரசாங்கம் விடுத்துள்ள கண்டிப்பான உத்தரவு, விபரம் கீழே உள்ள வீடியோவில்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe