சர்வதேச விதிமுறைகளையும் வழி காட்டல்களையும் தாண்டி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களது சடலங்கள் எரிக்கப்படும் நிலையில , மாதம்பிட்டிய ரபாய்தீன் போன்ற நோய் தொற்று உறுதி செய்யப்படாதவர்களது சடலங்களும் எரியூட்டப்படுவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தனது சமூக வலைத்தள பக்கங்களின் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த நபரது சடலம் கொரோனா தொற்றாளர்களது சடலத்தை கையாள்வது போன்று பொதியிடப்படாமல் சாதாரணமான முறையிலேயே பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, அத்துடன் அவரது உறவினர்களும் எவ்வித தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்பட வில்லை.
இதுவரை கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை அறிக்கைகளும் உறவினர்களுக்கு இந்த நிமிடம் வரை கையளிக்கப்படவில்லை.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் நபர்களது உடலங்களை அடக்கம் செய்வதற்கான உலக சுகாதார ஸ்த்தாபனம் , மற்றும் உலகளாவிய விஞ்ஞானிகளது பரிந்துரைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு, உறவுகளுக்கான இறுதி கிரியைகளை கூட சரி வர நிறைவேற்ற முடியாத நிலையிலே அவற்றை எரிக்கும் நிலையில் நோய் தொற்றுக்கு உள்ளாகாதவர்களையும் எரிப்பது என்பது ஏற்க முடியாத ஒன்று.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த விடயம் தொடர்பிலான தனது மௌனத்தை கலைத்து இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தவர்களதும், நோய் தொற்று இல்லாமல் எரியூட்டப்பட்டவர்களது விபரங்களையும் வெளியிட வேண்டும்.
கத்தார் நாட்டில் உள்ள அனைவருக்கும் கத்தார் நாட்டின் அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு, தகவலுக்கு வீடியோவினை முழுமையாகப் பாருங்கள்.