பொருளாதார மீளமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ச இன்று இலங்கையில் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தின் முதல் தொகுதியை அமெரிக்க தூதுவரிடம் கையளித்தார்.
200 மில்லியன் முககவசத்தை தயாரித்து ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் முதல் தொகுதியையே நேற்று அவர் அமெரிக்க தூதுவரிடம் கையளித்தார்.
இன்று இது தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வின்போது கருத்துரைத்த அமெரிக்க தூதுவர் எலைய்னா பி டெப்லிட்ஸ், இலங்கை நிறுவனத்தின் முயற்சியை பாராட்டினார்.
அத்துடன் இலங்கையின் இவ்வாறான முயற்சிகளுக்கு தமது நாடு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
செய்தி மூலம் - http://www.newswire.lk
கத்தாரில் உள்ள அனைவருக்கும் அந் நாட்டு அரசு விடுத்துள்ள கண்டிப்பான உத்தரவு, தகவலை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவினை கிளிக் செய்து கொள்ளுங்கள்.