Ads Area

டுபாயில் பிச்சை எடுத்து வந்த 242 பேர் கைது ; டுபாயில் பிச்சை எடுப்பதற்கு தடை.

ஐக்கிய அரபு ராஜ்ஜிய டுபாய் நகரத்தில் பிச்சை எடுத்து வந்த 242 வெளிநாட்டினரை டுபாய் பொலிசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். டுபாயில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது அதனையும் மீறி இந்த ரமழான் மாதத்தில் பிச்சையெடுத்து வந்தவர்களை தற்போது டுபாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 143 ஆண்கள் மற்றும் 21 பெண்களும் அடங்குவர் எனவும் இவர்களோடு சட்டவிரோத தெரு வியாபாரிகளில் 78 பேரும் டுபாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் யாசகம் கேட்பது பற்றிய சட்டம், தண்டனை, தடை போன்ற சகல விடையங்களையும் அறிந்து கொள்ள வீடியோவினை முழுமையாகப் பார்க்கவும்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe