Ads Area

சவுதியில் முகக் கவசம் (Face Mask) அணியாது விட்டால் 1000 சவுதி றியால் அபராதம்.

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முககவசம் அணியாமல் இருந்தாலோ அல்லது சமூக இடைவெளியை (social distance) பின்பற்றாமல் இருந்தாலோ 1,000 சவூதி ரியால் அபராதமாக விதிக்கப்படும் என்று சவூதி உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை (நேற்று) அறிவித்தது.

இதுகுறித்து அமைச்சகம் கூறும்போது, 

பொது துறை அல்லது தனியார் துறை கட்டிடங்களுக்குள் நுழையும்போது செய்யப்படும் வெப்பநிலை பரிசோதனையை மறுக்கும் நபர்களுக்கு 1,000 சவூதி ரியால் அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் கிருமிநாசினிகள் மற்றும் சானிடைசர்கள் வைக்கத் தவறும் நிறுவனங்களுக்கு 10,000 சவூதி ரியால் அபராதமாக விதிக்கப்படும்.

வணிக நிறுவனங்கள் அல்லது ஷாப்பிங் சென்டர்களில் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் ஷாப்பிங் கார்ட்ஸ் (shopping carts) மற்றும் ஷாப்பிங் கூடைகளை (baskets) சுத்தம் செய்யாமல் இருப்பது மற்றும் மால்களின் நுழைவு பகுதிகளின் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனையை மேற்கொள்ளாத வணிக நிறுவனங்களுக்கும் 10,000 சவூதி ரியால் அபராதமாக விதிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, வழக்கமான கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறும் நிறுவனங்களுக்கு அதே அபராதம் (10,000 சவூதி ரியால்) விதிக்கப்படும்.

மருத்துவ அல்லது துணியினாலான முக கவசங்களை அணியாத மக்களை தங்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் மீது 10,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது,

கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக அதிக கூட்ட நெரிசல் உருவாகுவதை தவிர்க்கவும், சமூக இடைவெளியை சரிவர கடைபிடிப்பதை உறுதிசெய்வதற்காகவும் இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக “வீடுகள், பண்ணைகள் அல்லது இதர பகுதிகளில் நடைபெறும் திருமணங்கள் மற்றும் துக்க நிகழ்வுகள் போன்ற குடும்பம் சார்ந்த அல்லது குடும்பம் சாராத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியது.

Tamil News from - சவுதி தமிழ் வெப்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe