சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (31.05.2020) புதிதாக 1,877 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 85,261. ஆக உயர்ந்துள்ளதாக சவுதியின் சுகாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் சவுதியில் இன்று மட்டும் கொரோனாவினால் 23 பேர் மரணமடைந்துள்ளனர் இவர்களோடு மொத்த மரண எண்ணிக்கை 503 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் (31.05.2020) புதிதாக 3,559 பேர் கொரோனா வைரஸில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் இவர்களோடு சேர்த்து மொத்தமாக அங்கு இதுவரை 62,442 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவான மக்கள் அதிலிருந்து தினம் மீண்டுவருவதாகவும் இது கொரோனா வைரஸ் நோயாளிகள் என அடையாளம் காணப்படுவோரின் தொகையை விடவும் அதிகமாகும் எனவும் தெரிய வருகிறது.