குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ஜவாஹிருல்லா கடிதம்!
Makkal Nanban Ansar14.5.20
பொது மன்னிப்பு வழங்கப்பட்டு குவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு தமிழ் நாடு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் கூறியதாவது, இருப்பிட அனுமதி சட்டத்தை மீறிய இந்தியர்கள் நாடு திரும்ப குவைத் அரசு பொது மன்னிப்பு வழங்கியதாகவும், அவர்கள் மீண்டும் புதிய விசாவில் குவைத்திற்கு வேலைகளுக்கு வரலாம் என்று சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாயகம் திரும்ப முயற்சிக்கும் 15,000 நபர்களில், சுமார் 7,000 பேர் தங்கள் பாஸ்போர்ட் உடன் தயார்நிலையில், குவைத் அரசு தங்குமிடத்தில் 25 நாட்களாக காத்திருப்பதாகவும், ஆனால் இந்திய அதிகாரிகள் கால தாமதப்படுத்துவதை அறியமுடிவதால் அவர்கள் நாடு திரும்ப சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய அரசு தலையிட்டு அவர்கள் அனைவரும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமீன் குறிப்பிட்டுள்ளார்.