கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் லேத் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம், கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருடு போனது.
இந்நிலையில், நேற்று கொரியர் ஒன்று வந்திருப்பதாக சுரேசுக்கு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து கொரியர் அலுவலகம் சென்று பார்த்தபோது, தனது இரு சக்கர வாகனம் கொரியரில் வந்திருப்பது கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார் சுரேஷ்.
பிரசாந்த் மயிலாடுதுறையில் இருந்து சுரேசுக்கு இரு சக்கர வாகனத்தை கொரியர் அனுப்பியுள்ளார். வாகனப் போக்குவரத்து இல்லாததால் சொந்த ஊர் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தைத் திருடிச் சென்று திருப்பி அனுப்பினாரா அல்லது காவல் துறை நடவடிக்கைகளுக்கு பயந்து திருப்பி அனுப்பினாரா என்பது குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.