தகவல் - சம்மாந்துறை அன்சார்
சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (03.06.2020) புதிதாக 1,975 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 93,157 ஆக உயர்ந்துள்ளதாக சவுதியின் சுகாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் (04.06.2020) புதிதாக 806 பேர் கொரோனா வைரஸில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் இவர்களோடு சேர்த்து மொத்தமாக அங்கு இதுவரை 68,965 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சவுதி அரேபியாவில் இடம் பெற்ற கொரோனா மரணங்களில் நேற்றும் (30 பேர்) இன்றும் அதிகளவான மரணங்கள் இடம் பெற்றுள்ளது.