ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்டவரிடம் கஞ்சா மற்றும் வாள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இத்தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பிரியந்தவின் வழிநடத்தலுக்கமைய மேற்குறித்த உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் சார்ஜன்ட் ஏ.எச் அப்துல் மஜித்(64270)கொஸ்தாபிள் ஏ.எல் ஹிதாயதுல்லா(76354) ஆகியோர் கார் ஒன்றில் மாறுவேடம் அணிந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இதன் போது தொலைபேசியில் தொடர்பினை ஏற்ற சந்தேக நபர் கஞ்சா மற்றும் வாள் தம்முடன் எடுத்து கொண்டு கறுப்பு நிற வர்ணமுடைய வாகன இலக்கத்தகடு அற்ற பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் வருகை தந்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட பொலிஸ் குழு சந்தேக நபரை மடக்கி பிடித்ததுடன் 300 கிராம் நிறையுடையதும் பாடசாலை புத்தகத்தில் சுற்றிய நிலையில் 75 கஞ்சா பக்கேற்றுக்கள் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 2 அடி வாள் கைத்தொலைபேசி மற்றும் டியோ ரக கறுப்பு நிற மோட்டார் சைக்கிள் ஒன்றினை மீட்டுள்ளனர்.
அத்துடன் இவ்வாறு கைதான சந்தேக நபர் மருதமுனை அல்மனார் வீதியை சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர் எனவும் வெள்ளிக்கிழமை(5) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொளண்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரவித்தனர்.