ஏ.ஜே.எம்.ஹனீபா.
பள்ளிவாசல்களை 15ம் திகதி மீளத் திறப்பது தொடர்பான விஷேட கலந்துரையாடல் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் நேற்று 2020/06/07 நடைபெற்றது.
சம்மாந்துறை மஜ்லிஷ் அஷ்ஷூறா, நம்பிக்கையாளர் சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு சகல பள்ளிவாசல்களினதும் தலைவர்களின் பங்கு பற்றலுடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கபீர், பொலிஸ் நிலைய பொறுபதிகாரி திரு சுரவீர ஜயரத்ன, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.சுபை தீன், பிரதம நம்பிக்கையாளர் மெளலவி யூ.எல்.மஹ்றுப் மதனி,மஜ்லிஷ் அஷ்ஷூறா அமீர் மெளலவி ஆதம்பாவா மதனி,மஜ்லிஷ் அஷ்ஷூறா தவிசாளர் சத்தார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.