ரியாத்தின் தெற்கு பகுதியில் உள்ள அல் மனாக் மாவட்டத்தில், இரண்டு விபச்சார விடுதியை நடத்தி வந்த இரண்டு பங்களாதேஷ் நாட்டினரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அங்கு விபச்சார தொழில் நடத்தி வந்த மொத்த கும்பல் மற்றும் அங்கிருந்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மேலும் கூறுகையில், சந்தேகத்திற்குரிய இந்த நபர்கள் ஏராளமான வீட்டு பணிப் பெண்களை கவர்ந்ததாகவும், அவர்களது ஆதரவாளர்களிடம் (sponsors) இருந்து தப்பித்து வர உதவி செய்ததோடு, அவர்களை விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் அல் துவைஜ்ரி தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பபடுவதற்கு முன்பு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Source: Gulf News