தொழில் நிமித்தம் வௌிநாடு சென்று நாடு திரும்பியவர்கள் தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தரவுகள் சேகரிக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 17 திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார். கொரியா, இத்தாலி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெருமளவானோர் நாடு திரும்பினர்.
Qatar Tamil.